முகப்பு /புதுச்சேரி /

12 மணி நேர வேலையை 8 மணிநேரமாக மாற்ற உயிர் தியாகம் செய்த புதுச்சேரி தொழிலாளர்கள்..

12 மணி நேர வேலையை 8 மணிநேரமாக மாற்ற உயிர் தியாகம் செய்த புதுச்சேரி தொழிலாளர்கள்..

X
உயிர்

உயிர் தியாகம் செய்த புதுச்சேரி தொழிலாளர்கள்

Pondicherry Labour's : 12 மணி நேர வேலையை 8 மணி நேரமாக குறைப்பதற்கு புதுச்சேரியில் தான் முதல் முறையாக பல தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, இந்த நாட்டுக்காக உழைக்கும் தொழிலாளர்களின் மேன்மை உலகறிந்த நாள். அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்த நாள் தான் உழைப்பாளர் தினம் என்று போற்றப்படும் மே தினமாகும்.

அந்த வகையில் புதுச்சேரியில் உழைப்பாளர் தினம் என்றாலே ஒரு தனி சிறப்பு தான். இங்கே, தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் தங்கள் தொழிற்சங்க கொடிகளை ஏற்றி அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடுகின்றனர்.

உயிர் தியாகம் செய்த புதுச்சேரி தொழிலாளர்கள்

இந்நிலையில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புதுவை அரசுக்கு புதுச்சேரி தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, எல்.அண்ட்.டி தொழிற்சாலை தொழிலாளர் ரமேஷ் கூறுகையில், “12 மணி நேர வேலையை 8 மணி நேரமாக குறைப்பதற்கு புதுச்சேரியில் தான் முதல் முறையாக பல தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் நினைவாகத் தான் இங்கே மே தினம் கொண்டாடுகிறோம்.

ஆனால், பல தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து முதலாளிகளுக்காக உழைத்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் தொழிலாளர்களின் வறுமையை புரிந்து கொண்டு சில தொழிற்சாலைகள் அவர்களை அடிமைபோல் நடத்துகின்றனர். இந்த மே தினத்தில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு தொழிலாளர்கள் சட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல் 8 மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை 12 மணி நேரமாக கொண்டு வந்துள்ளார்கள், இதையெல்லாம் எதிர்த்து நாம் போராட வேண்டும் சூழ்நிலைக்கு மீண்டுன் வந்துள்ளோம்.

top videos

    புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு கடந்த ஆட்சியில் கிரண்பேடி இருந்த பொழுது, நல வாரியம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை எனவே உடனடியாக தொழிலாளர் நல வாரியத்தை அமைக்க வேண்டும் என தொழிலாளர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறேன்” என்று கூறினார்.

    First published:

    Tags: Local News, Puducherry