முகப்பு /புதுச்சேரி /

களைகட்டிய காரைக்கால் மஸ்தான் சாகிபு தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்.. பக்தர்கள் பரவசம்!

களைகட்டிய காரைக்கால் மஸ்தான் சாகிபு தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்.. பக்தர்கள் பரவசம்!

X
சந்தன

சந்தன கூடு ஊர்வலம்

Puducherry News | காரைக்காலில் நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற மஸ்தான் சாகிபு வலியுல்லாஹ் தர்கா. இங்கு 200 ஆண்டுகளாக சந்தனக்கூடு ஊர்வலம் விமரிசையாக நடத்தப்படும். இந்த ஆண்டும் அதே போல் கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

தினந்தோறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட போர்வைகளை சுமந்த படி முக்கிய வீதிகள் வழியாக மஸ்தான் சாகிபு தர்காவிற்கு கொண்டு வந்து சமாதியில் போர்த்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 300 அடி உயரமுள்ள சந்தனக்கூடு சிறப்பு பிரார்த்தனைக்கு பின் தர்காவில் இருந்து புறப்பட்டது, அதனுடன் பல்லாக்கு, கப்பல் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள் முக்கிய வீதிகள் வழியாக நள்ளிரவில் வலம் வந்தது.

இந்த விழாவில் புதுச்சேரி, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கண்விழித்து கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். நள்ளிரவில் ஏராளமான உயரமான மின் அலங்கார ஊர்திகள் வலம் வந்ததால் பாதுகாப்பு கருதி பகுதி பகுதியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. விடிய விடிய நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்தனக்கூடு வலம் வந்த பின்பு மஸ்தான் சாஹிப் தர்காவில் உள்ள அவரது சமாதியில் சந்தனம் பூசப்பட்டது அப்போது நடத்தப்பட்ட விஷே பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

First published:

Tags: Local News, Muslim, Puducherry