முகப்பு /செய்தி /புதுச்சேரி / இனி மாஸ்க் கட்டாயம்... அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடு - காரைக்கால் ஆட்சியர் அதிரடி உத்தரவு

இனி மாஸ்க் கட்டாயம்... அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடு - காரைக்கால் ஆட்சியர் அதிரடி உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

Mask : கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Karaikal, India

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு பொது இடங்களில் கட்டாயம் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பொது இடங்களில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முதக்கவசம் அணியவேண்டும்.

இதையும் படிங்க : ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனாவுக்கு ஒருவர் பலி... காரைக்காலில் நிகழ்ந்த சோகம்!

மேலும் தியேட்டர், வணிக வளாகங்கள், மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்” மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

First published:

Tags: Corona, Karaikal, Local News, Puducherry