முகப்பு /புதுச்சேரி /

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி.. புதுச்சேரி அரசு பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்..

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி.. புதுச்சேரி அரசு பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்..

X
மாதிரி

மாதிரி படம்

Corona Mask | கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக புதுச்சேரி மாநில பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அரசின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 15 தினங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பொது இடத்தில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் எனவும், சுகாதாரத்துறை வெளியிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

இதனைத்தொடர்ந்து பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வந்தது. இதையடுத்து, பெரும்பாலான பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து வந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் முகக்கவசம் அணிந்து வராதவர்களுக்கு பள்ளிகளில் முகக்கவசம் வழங்கப்பட்டது. தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதால் தேர்வு எழுத வந்த மாணவர்களும் முகக்கவசம் அணிந்து தேர்வு எழுதும் அறைக்கு வரும்படி பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியிருந்ததை தொடர்ந்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். மேலும் முன்னதாக தேர்வு எழுதும் அறைகள் அனைத்தும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

top videos
    First published:

    Tags: Corona, Corona Mask, Local News, Puducherry