முகப்பு /புதுச்சேரி /

மரக்காணம் அருகே 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலில் கோபுர கால் நடும் விழா..!

மரக்காணம் அருகே 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலில் கோபுர கால் நடும் விழா..!

X
சிவன்

சிவன் கோயிலில் கோபுர கால் நடும் விழா

Marakanam poojai | மரக்காணம் அருகே 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலில் கோபுர கால் நடும் பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுவை அடுத்த தமிழக பகுதியான மரக்காணம் அடுத்த முன்னூர் கிராமத்தில் 1300 ஆண்டுகள் பழமையான ஆடவல்லீஸ்வரர் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது.

கடந்த 1978 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 48 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் கோவில் கும்பாபிஷேகம் செய்ய திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று கோபுர வாயில் அமைப்பதற்கான பூஜை நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு கோபுர வாயில் எழுப்ப கால்கள் நாட்டப்பட்டு தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Puducherry, Temple