முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி கவர்னர் மாளிகை முன் தீக்குளிக்க முயன்ற கூலித்தொழிலாளியால் பரபரப்பு..

புதுச்சேரி கவர்னர் மாளிகை முன் தீக்குளிக்க முயன்ற கூலித்தொழிலாளியால் பரபரப்பு..

X
தீக்குளிக்க

தீக்குளிக்க முயன்ற கூலித்தொழிலாளி

Puducherry News | புதுச்சேரியில் காணாமல்போன தாய் வாங்கி கடனை தன்னை அடைக்க கூறி மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  கூலி தொழிலாளி குடும்பத்துடன் கவர்னர் மாளிகை முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் விக்னேஷ், கூலி தொழிலாளியான இவர் தந்தை சங்கர், மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது தாய் முத்தாளம்மாள் கடந்த 2019ம் ஆண்டு வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். இதையடுத்து காணாமல்போன முத்தாளம்மாள் தங்களிடம் கடன் வாங்கி இருப்பதாக கூறி அடையாளம் தெரியாத சிலர் ரவுடிகளுடன் தன் வீட்டிற்கு வந்து பணத்தை கேட்டு மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு வைத்தார்.

இந்நிலையில், கடந்த 25ம் தேதி சாந்தி என்பவர் விக்னேஷ் வீட்டிற்கு வந்து, அவரது தந்தை சங்கரிடம், முத்தாளம்மாள் வாங்கிய கடனை திரும்ப கேட்டு தாக்கியுள்ளார். அதில் மனமுடைந்த சங்கர் வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று, தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க : மதுரை மத்திய சிறைக்கு 1000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!

இதுகுறித்து விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசில் புகார் அளிக்க சென்றபோது, போலீசார் புகாரை வாங்க மறுத்து, அவர்களை அலைக்கழித்ததாக விக்னேஷ் தெரிவித்தார். அதில் விரக்தியடைந்த விக்னேஷ் கவர்னர் மாளிகை எதிரே தனது மனைவி மற்றும் குழந்தையுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தகவலறிந்த அறிந்த பெரியக்கடை போலீசார் அவர்களை தடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் கவர்னர் மாளிகை பகுதியல் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

First published:

Tags: Local News, Puducherry