முகப்பு /புதுச்சேரி /

கீழ்புத்துபட்டு பராசக்தி ஆலய மகா கும்பாபிஷேக விழா.. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிப்பு..

கீழ்புத்துபட்டு பராசக்தி ஆலய மகா கும்பாபிஷேக விழா.. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிப்பு..

X
கீழ்புத்துபட்டு

கீழ்புத்துபட்டு பராசக்தி ஆலய மகா கும்பாபிஷேக விழா

Kilputhupattu Parasakthi Amman Temple : புதுச்சேரி கீழ்புத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள பராசக்தி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கீழ்புத்துபட்டில் பராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த 3ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து சூர்யகும்ப பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து கலசம் புறப்பாடு நடைபெற்றது.

கீழ்புத்துபட்டு பராசக்தி ஆலய மகா கும்பாபிஷேக விழா

இதனைத்தொடர்ந்து , விமான கோபுரத்திற்கும், மூலமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றும்போது, “ஓம் சக்தி, பராசக்தி” என்ற கோஷத்துடன் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வணங்கி சென்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry