முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் நடைபெற்ற விளக்கு பூஜை.. மனமுருகி மாரியம்மனை வேண்டிய பெண்கள்..

புதுவையில் நடைபெற்ற விளக்கு பூஜை.. மனமுருகி மாரியம்மனை வேண்டிய பெண்கள்..

X
புதுவையில்

புதுவையில் நடைபெற்ற விளக்கு பூஜை

Puducherry News | புதுச்சேரியில் உள்ள ஸ்ரீமந்தைவெளி மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண் பக்தர்கள் பங்கேற்று பூஜை செய்து வழிபட்டனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முத்தியால்பேட்டை- சோலை நகர் பகுதியில் ஸ்ரீமந்தைவெளி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் 47ம் ஆண்டாக சித்திரை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆலய வளாகத்தில் மீனாட்சியுடன், நீல பட்டு உடுத்தி அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் எழுந்தருளினார்.

இதனைத்தொடர்ந்து, உற்சவ அம்மனுக்கு 2 பக்கங்களிலும் குத்து விளக்குகள் ஸ்ரீதேவியாக அலங்காரம் கொண்டிருக்க, ஏராளமான பெண்கள் மனமுருகி விளக்கு வைத்து பூஜை நடத்தினர். மேலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கிற்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு பெண்கள் பூஜை செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    தொடர்ந்து உற்சவர் மற்றும் மூலவர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை மனமுருகி தரிசனம் செய்தனர்.

    First published:

    Tags: Local News, Puducherry