முகப்பு /புதுச்சேரி /

தவளக்குப்பம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா.. திரளான பக்தர்கள் தரிசனம்..

தவளக்குப்பம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா.. திரளான பக்தர்கள் தரிசனம்..

X
தவளக்குப்பம்

தவளக்குப்பம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

Thavalakkuppam Mariyamman Temple : புதுச்சேரி தவளக்குப்பம் மாரியம்மன், காளியம்மன், பெருமாள் கோயில்களின் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் நிறைவுபெற்று கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கடந்த 21ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வரா பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற 4ம் கால, யாக பூஜைகளுக்கு பிறகு குடங்களில் புனித நீர் கொண்டு செல்லப்பட்டு, காலை 7 மணிக்கு கோயில்களின் கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில், புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவை தலைவர் செல்வம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry