முகப்பு /புதுச்சேரி /

ஆனந்த கும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்..

ஆனந்த கும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்..

X
புதுவை

புதுவை கும்பேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Puducherry | புதுச்சேரியில் ஸ்ரீ ஆனந்த கும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விமரிசையாக நடைபெற்றதுவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி, பிள்ளைத்தோட்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ ஆனந்த வள்ளி சமேத கும்பேஸ்வரர் கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 1ஆம் தேதியன்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

நாள்தோரும் சிறப்பு யாகம் நடத்தப்பட்ட நிலையில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஸ்ரீ கும்பேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழா பக்தர்கள் வெள்ளத்தில் மத்தியில் நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், ரிச்சர்ட் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Puducherry