முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா..! வடம் பிடித்து பக்தர்கள் பரவசம்..!

புதுச்சேரி கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா..! வடம் பிடித்து பக்தர்கள் பரவசம்..!

X
புதுச்சேரி

புதுச்சேரி கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா

Koothandavar Temple Chariot Festival 2023 : புதுச்சேரி மாநிலம் நெடப்பாக்கம் கொம்யூன், மடுகரை ஸ்ரீதிரௌபதி அம்மன் ஸ்ரீகூத்தாண்டவர் ஆலயத்தில் உற்சவ தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி ஸ்ரீதிரௌபதி அம்மன், ஸ்ரீகூத்தாண்டவர் கோவிலில் கடந்த 5ம் தேதி காலை ஸ்ரீபிடாரி அம்மனுக்கும், ஸ்ரீமாரியம்மனுக்கும் சாகைவாத்தல், மாலை ஊராணி பொங்கல், இரவு பிடாரியம்மன் ஸ்ரீமாரியம்மன் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் திருமஞ்சனம் தீபார்தனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், காலை ஸ்ரீகூத்தாண்டவர் ராதா உற்சவம் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ராஜவேலு தலைமையில் தேர் வடம் பிடித்து இழுத்து செல்லப்பட்டு வீதி புறப்பாடு நடைபெற்றது.

புதுச்சேரி கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா

இந்த விழாவில், ஊர் பொதுமக்கள் பக்த கோடிகள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து திரௌபதி அம்மன், மாரியம்மன், கிருஷ்ணர், அர்ஜுனன் போன்ற மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளை வணங்கி சென்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் அறங்காவலர் குழு மற்றும் கிராமவாசிகள், ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Puducherry