முகப்பு /புதுச்சேரி /

காரைக்கால் மஸ்தான் சாகிப் தர்காவின் 200வது கந்தூரி விழா தொடங்கியது..!

காரைக்கால் மஸ்தான் சாகிப் தர்காவின் 200வது கந்தூரி விழா தொடங்கியது..!

X
காரைக்கால்

காரைக்கால் கந்தூரி விழா

Puducherry | காரைக்கால் மஸ்தான் சாகிப் தர்காவின் 200வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karaikal, India

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற மஸ்தான் சாகிப் தர்கா. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு 200வது ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட பல்வேறு ரதங்கள், பல்லாக்கு, கப்பல் உள்ளிட்ட ஊர்திகளில் கொடிகள் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின்பு இரவு மஸ்தான் சாகிப் தர்கா வந்ததடைந்தது. இதனைத்தொடர்ந்து 200அடி உயர கொடிமரம் உள்ளிட்ட 4 மினாராக்களில் கொடியேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி அமைச்சர் சந்திரப்பிரியங்கா, நாஜிம் எம்.எல்.ஏ உள்ளிட்ட சர்வமத பிரதிநிதிகள் உள்ளிட்ட தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பாதுகாப்பு பணியில் 100க்கணக்காக போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வரும் 11ந்தேதி நடைபெறுகின்றது. அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்பதால் இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

First published:

Tags: Karaikal, Local News