முகப்பு /புதுச்சேரி /

கன்னியக்கோவில் புதுநகர் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்.. புதுச்சேரியில் குவிந்த பக்தர்கள்..

கன்னியக்கோவில் புதுநகர் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்.. புதுச்சேரியில் குவிந்த பக்தர்கள்..

X
கன்னியக்கோவில்

கன்னியக்கோவில் புதுநகர் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்

Puducherry News | புதுச்சேரி கன்னியக்கோவில் புதுநகர் கிராமத்தில் பாலமுருகன் கோவில் குடமுழுக்கு விழா சபாநாயகர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் கிழக்கு கடற்கரை சாலை கன்னியக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கூடுதலாக பாலமுருகன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கருவறை, விமானம், மகா மண்டபம், மற்றும் பாலமுருகன், பிள்ளையார், பழனி ஆண்டவர், பத்ரகாளி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கோவிலின் குடமுழுக்கு விழா சபாநாயகர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதற்காக மங்கல இசை மற்றும் பிள்ளையார் வழிபாடு, திரு குடமுழுக்கு உத்தரவு பெறுதல், விநாயகர் வேள்வியின் நிகழ்ச்சி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து புதிய சிலைகளுக்கு கண் திறத்தல், புத்து மண் எடுத்து முளைப்பாரி இடுதல், கங்கணம் கட்டுதல், கும்ப அலங்காரம் ஆகியவை நடைபெற்றது.

இதனையடுத்து, திருப்பள்ளி எழுச்சி, மங்கள விநாயகர் வழிபாடு, கோ பூஜை, திருக்குளத்தில் தெய்வங்களை எழுந்தருள செய்தல், மற்றும் 2ம் கால வேள்வி நடைபெற்று 108 மூலிகைப் பொருட்களை கொண்டு வேள்வி நிலையிடுதலும், தொடர்ந்து கடம் புறப்பாடுடன் விமான கோபுர கலசத்திற்கு திருக்குட நன்னீரட்டு, மூலவர் திருமேனிக்கு திருக்குட முழக்கு நன்னீராட்டுதலும் நடைபெற்றது.

இதையும் படிங்க : புதுச்சேரியில் பார்வையாளர்களைக் கவர்ந்த நாய், பூனை கண்காட்சி..!

இந்த கும்பாபிஷேக விழாவில் சபாநாயகர் செல்வம், என.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் அசோக், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில செயலாளர் ஞான பிரகாசம் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய விழா குழுவினர் ஆலய திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

First published:

Tags: Local News, Puducherry