முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் மறைந்த நடிகர் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்

புதுச்சேரியில் மறைந்த நடிகர் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்

X
மயில்சாமிக்கு

மயில்சாமிக்கு இரங்கல்

Actor Mayilsamy | 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். 57 வயதான மயில்சாமி சிறிய, பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது உடல் ஏ.வி.எம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி நடிகர்கள் மற்றும் பன்முகக் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக அண்ணா சாலையில் நடிகர் மயில்சாமி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

First published:

Tags: Local News, Puducherry