முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி அரசு ஜவகர் சிறுவர் பள்ளியில் கோடை சிறப்பு பயிற்சி வகுப்புகள்.. ஆர்வம் காட்டும் மாணவர்கள்..

புதுச்சேரி அரசு ஜவகர் சிறுவர் பள்ளியில் கோடை சிறப்பு பயிற்சி வகுப்புகள்.. ஆர்வம் காட்டும் மாணவர்கள்..

X
கோடை

கோடை சிறப்பு பயிற்சி வகுப்புகள்

Special Training Course During Summer Holidays : கோடை விடுமுறையை முன்னிட்டு புதுச்சேரி பள்ளி கல்வி இயக்கத்தில் ஜவகர் சிறுவர் இல்லம் சார்பில் குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்கத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஜவகர் சிறுவர் இல்லம் சார்பில் குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த பயிற்சியில் பல்வேறு வகையான நடனம், இசை, வீணை, மிருதங்கம், ஓவியம், கைவினை, பிடார், கீபோர்டு, ட்ரம்ஸ், கையெழுத்து பயிற்சி மற்றும் விளையாட்டு ஆகிவற்றை கற்பிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்து இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன.

கோடை சிறப்பு பயிற்சி வகுப்புகள்

இதில், 6 வயது முதல் 16 வயதுள்ள புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் கலந்துகொள்ளலாம். மேலும் இந்த சிறப்பு பயிற்சி மே 31ம் தேதி தேதி வரை நடைபெறுகிறது. இதில், பங்கேற்றுள்ள மாணவர்கள் இந்த பயிற்சியில் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பயிற்சி காலை 9.30 மணி முதல், பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த கோடைகால பயிற்சி வகுப்பில் புதுச்சேரி மாநிலத்தின் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry