புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 20 பேர் உலக நன்மை வேண்டி மண்டியிட்டு பக்தி பரவசத்துடன் சிறப்பு பூஜை செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக உலகமேகொரோனா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டது. மேலும் ஆண்டுதோறும் பல்வேறு உருமாறிய கொரோனா மக்களை மிரட்டி வருகின்றது. மேலும் இதுபோன்ற கொடிய நோய்களிலிருந்தும் உலகம் விடுபட வேண்டி அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆன்மீக பூமியான புதுச்சேரியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மற்றும் பலர் இங்கேயே வசித்தும் வருகின்றனர்.
இதில் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், உலகம் பல்வேறு கொடிய நோய்களிலிருந்து விடுபட்டு நன்மை பெறவேண்டி சிறப்பு பூஜை செய்தார்கள்.
அதன்படி, மணக்குள விநாயகர் கோவிலில் நடைபெற்றசிறப்பு பூஜையில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டுகாரர்கள் மணக்குள விநாயகருக்கு பிடித்தமான தாமரை பூ மற்றும் அருகம்புல் வைத்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்கள்.
சிவ ஆதீன பால கும்ப குரு முனி தலைமையில் ஜப்பான் தொழில் அதிபர் கோபால்சுப்பிரமணிமுன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட ஜப்பானியர்கள், மணக்குள விநாயகர் முன்பு தரையில் அமர்ந்து மண்டியிட்டு உலகம்நன்மையடையவேண்டும் என்று பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.
இந்த சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை பழனி புலிப்பாணி ஆசிரமம் நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலும் இம்மாதம் நடைபெற உள்ள போகர் ஜெயந்தி விழாவில் இவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry