சர்வதேச நடன தினமானது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் கலை நிகழ்ச்சிகளுக்கான சர்வதேச நாடக நிறுவனத்தின் நடனக் குழுவால் உருவாக்கப்பட்டது. இது 1982 இல் உருவாக்கப்பட்டது. நடனத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 29ல் சர்வதேச நடன தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் உலகின் நடனக் கலைஞர்கள் மற்றும் நடன குழுக்கள் இந்த நாளைக் கொண்டாடுகின்றன. நடன சமூகங்கள் கலை வடிவத்தை நோக்கி உலகின் கவனத்தைப் பெற இது ஒரு முக்கியமான நாள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இது குறித்து புதுவை நடன இயக்குநர் ஸ்டாலின் கூறுகையில், புதுவையில் 30 ஆண்டு காலமாக நடன பள்ளி வைக்கும் நடத்தி வருகிறேன். நடன பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுள்ளனர் என்றும், நடனத்தால் அறிவு திறன், ஞாபக சக்தி உண்டாகும். மேலும் உடற்பயிற்சி விட நடனம் உடலை நன்கு பாதுகாக்கிறது. அதனால் அனைவரும் நடனம் கற்றுக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
மேலும், இந்த நடன பள்ளியில் பயின்றவர்கள் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ளனர். அவர்கள் தற்போது குடும்பத்துடன் வந்து விடுமுறை காலங்களில் நடனம் கற்று வருகின்றனர் என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry