முகப்பு /புதுச்சேரி /

இலவச மனை பட்டாவுக்காக சேகுவேரா வசனங்களுடன் புதுச்சேரியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள்...!

இலவச மனை பட்டாவுக்காக சேகுவேரா வசனங்களுடன் புதுச்சேரியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள்...!

X
போராட்டம்

போராட்டம் நடத்திய இளைஞர்கள் 

Puducherry News | முதல்வரும், ஆளுநரும், தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரி தேங்காய் திட்டு கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ளவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச மனை பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் விளைவாக கடந்த 2016 ஆம் ஆண்டு தேங்காய் திட்டு அய்யனார் கோவில் வீதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச மன பட்டா வழங்க வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை யாருக்கும் இலவச மனைப்பட்டா வழங்காமல்  திட்டம் அதோடு கைவிடப்பட்டது.

மேலும் 2016ல் இருந்து வழங்கப்பட்ட டோக்கனுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று பல கட்ட போராட்டங்களை நடத்தியும்  எந்தவித பலனும் இல்லை. இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த 10 இளைஞர்கள் ஒன்று கூடி புதுச்சேரி மறைமலை அடிகள் சாலை சுதேசி பஞ்சாலை எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் 2016ல் அரசு வழங்கிய இலவச மனைப்பட்டா டோக்கனுக்கு மாலை அணிவித்து அமர்ந்திருந்தனர். மேலும் அவர்கள் தலையில் வெள்ளை கலர் தொப்பி அணிந்தும் சேகுவேராவின் வீர வசனங்களை பேசியும் தங்களது எதிர்ப்புகளை நூதன முறையில் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து போராட்டத்தை ஒருங்கிணைத்த இளைஞர் தினேஷ் கூறும் போது, கடந்த 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட டோக்கனுக்கு இதுவரை இலவச மனைபட்டா வழங்கவில்லை. தற்போது தேங்காய் திட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வருவதால், வீட்டு வாடகை  ஏறிவிட்டது. இடங்களின் விலையும் ஏறிவிட்டது.

இதனால், தங்களால் பிழைப்பு நடத்த முடியவில்லை. எனவே முதல்வரும், ஆளுநரும் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களுடன் சமாதானம் பேசி போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார். இதனை அடுத்து போராட்டத்தை கைவிட்டு விட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

First published:

Tags: Local News, Puducherry