புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பழைய புதிய பொருட்களை வாங்க விற்க உதவும் உதவும் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களான OLX, Facebook, Instagram, Second Hand Mall, Koove, ListUp, Tradly, Quikr, Zefo, MaxDeal, EBaySpoyl, Tips To Sell Used Things Online போன்றவற்றில் இணைய வழி மோசடிக்காரர்கள் தங்களை ராணுவ வீரர்கள், CRPF அல்லது மத்திய அரசில் பணிபுரிகிறேன், தற்போது எனக்கு மாறுதல் வந்து விட்டதால் நான் அடுத்த வாரம் டெல்லி செல்ல வேண்டும்.
மேற்கண்ட பொருட்களை விற்க இருக்கின்றேன் என்று புகைப்படங்களுடன் கூடிய விளம்பரங்கள் தற்பொழுது மேலே குறிப்பிட்டுள்ள செயலீகளில் (APP) நிறைய வருகிறன. அவர்களை தொடர்பு கொண்டால் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருளை 90 ஆயிரத்திற்கு உங்களுக்கு கொடுக்கின்றேன். எங்களால் இந்த பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது என்று அவர்கள் தெரிவித்தவுடன் சிறிது பேரம் பேசி அவர்கள் கொடுக்கின்ற வங்கி கணக்குகளில் (UPI ID) நாம் அட்வான்ஸ் தொகையாக 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் பணத்தை செலுத்திய உடன் அவர்களுடைய இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதுபோன்ற குறைந்த விலைகளில் பொருள் கிடைக்கிறது என்று பொதுமக்கள் யாரும் பணத்தை மோசடி நபர்களிடம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுபோன்று 14 புகார்கள் பதிவாகியுள்ளது ஆகவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம்” என்று மீண்டும் புதுச்சேரி இணை வழி குற்றப்பிரிவு காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry