முகப்பு /புதுச்சேரி /

பழைய சிக்கன்.. மீந்துபோன எலும்பு பீஸ்.. புதுவை தனியார் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட வாடிக்கையாளர் அதிர்ச்சி!

பழைய சிக்கன்.. மீந்துபோன எலும்பு பீஸ்.. புதுவை தனியார் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட வாடிக்கையாளர் அதிர்ச்சி!

X
மாதிரி

மாதிரி படம்

Puducherry News | புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் செயல்பட்டு வரும் உணவத்தில் சிக்கனுக்கு பதிலாக மற்றவர்கள் சாப்பிட்டு போட்ட எலும்புகளை போட்டு தயார் செய்யப்பட்ட பிரியாணி வாடிக்கையாளர் ஒருவருக்கு பரிமாறப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது இர்பான் அசைவ உணவகம். இந்த உணவகத்தில் உணவருந்திய ஒருவர் சில நாட்களுக்கு முன்பு இங்கு அவருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியை ஒரு வீடியோ பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலானது. அந்த பதிவில் வாடிக்கையாளரான எனக்கு மற்றவர்கள் சாப்பிட்டு போட்ட எலும்புகளை வைத்து பிரியாணியை பரிமாறியாதாக குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் இந்த கடையில் பழைய சிக்கன், மீந்துபோன சிக்கன், பிரியாணியில் மீந்துபோன எலும்பு பீஸ் போட்டு பிரியாணி செய்வதாக புகார் எழுந்தது. அதேபோல் சுத்தம் சுகாதாரம் இல்லாமல் பிரியாணி செய்து விற்பனை செய்வதாகவும், கெட்டுப்போன எண்ணெயில் சிக்கன் 65 போட்டு தருவதாகவும் கலர் பவுடர் அதிகம் சேர்த்ததாகவும் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து வில்லியனூர் ஆணையர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, “வீடியோ வைரலாகி வருவது குறித்து எங்களுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளோம். அவர்கள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள்” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் அந்த உணவகத்தை ஆய்வு செய்தனர். அப்போது சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ போன்ற பிரியாணி தான் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி இருப்பது தெரியவந்தது.

மேலும் பிரியாணி கடை நடத்துவதற்கு உரிமம் உள்ளதா? பாதுகாப்பு முறைகள் கையாளப்படுகிறதா? என்று ஆய்வு செய்த அதிகாரிகள் இனிமேல் பிரியாணி மற்றும் பரோட்டா உள்ளிட்டவைகளை சுத்தமான எண்ணெயில் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை... அதிகரிக்கும் காய்ச்சலால் புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு!

இல்லை என்றால் அடுத்த முறை கடையை இழுத்து சீல் வைக்கப்படும் என்று எச்சரித்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Local News, Puducherry