முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் விடிய விடிய பெய்த மழை - சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி!

புதுச்சேரியில் விடிய விடிய பெய்த மழை - சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி!

X
சாலையில்

சாலையில் தேங்கிய மழைநீர்

புதுச்சேரியில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்ததால், நகரப் பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் ஒன்றோடு ஒன்று கலப்பதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

top videos

    இந்நிலையில், இரவு முதல் புதுச்சேரி நகரப்பகுதி மற்றும் கிராமப்புறங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இவ்வாறு விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால். வாகன ஓட்டிகளும் மற்றும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    First published:

    Tags: Local News, Puducherry