முகப்பு /புதுச்சேரி /

திருவிழா கொண்டாடுவதில் இரு பிரிவினர் இடையே மோதல்... புதுச்சேரி காலாப்பட்டில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!

திருவிழா கொண்டாடுவதில் இரு பிரிவினர் இடையே மோதல்... புதுச்சேரி காலாப்பட்டில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!

X
மாசிமக

மாசிமக திருவிழா கொண்டாடுவதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம்

Puducherry | இதனால் கணபதி செட்டிக்குளம் மீனவ கிராமத்தில் உள்ள இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் உண்டானது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு பகுதியில் மாசி மாத திருவிழா ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். இதன் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் கொண்டுவரப்பட்டு கடலில் தீர்த்தவாரி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.

அந்த வகையில் 30வது ஆண்டாக கணபதி செட்டிகுளம் கிராம மீனவர் பகுதியில் உள்ள ஆரணி கங்கை அம்மன் கோயிலில் இருந்து சாமி புறப்பட்டு காலாப்பட்டுக்கு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்த நிலையில் ஒரு பிரிவினர் காலாப்பட்டுக்கு சாமியை கொண்டு செல்லக்கூடாது என்று கூறியுள்ளனர். இது கணபதி செட்டிகுளம் மீனவ மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் கணபதி செட்டிக்குளம் மீனவ கிராமத்தில் உள்ள இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் உண்டானது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நிலையில் அந்த பகுதி மக்கள் ஒரு தரப்பினர் கூறும்போது, “பாரம்பரியமாக ஆண்டுதோறும் மாசி மாத திருவிழாவில் கங்கை அம்மன் கோயில் உற்சவர் கொண்டு செல்லப்பட்டு மாசி மகம் நடத்துவது வழக்கம். யார் தடை செய்தாலும் திருவிழாவிற்கு சாமியை கொண்டு செல்வோம்’ என  தெரிவித்திருக்கிறார்கள். மீனவ மக்களின் இந்த அறிவிப்புக்கு இந்து முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளது. தடையை மீறி மக்கள் விருப்ப படி சாமி கொண்டு செல்ல இந்து முன்னணி துணையாக இருக்கும்” என தெரிவித்துள்ளது.

மேலும் மாசி மகம் திங்கட்கிழமை நடைபெற உள்ள நிலையில் மீனவ கிராமத்தில் ஒரு தரப்பினர் சாமியை கொண்டு செல்ல வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் கொண்டு செல்லக்கூடாது என்றும் கூறிவருவதால் இரு பிரிவுகளாக பிரிந்துள்ளனர். இதனால் மோதல் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு பணிக்காக போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்

First published:

Tags: Local News, Masi Magam, Puducherry