முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் பொதுமக்களை கவரும் கைவினை பொருட்கள் கண்காட்சி

புதுவையில் பொதுமக்களை கவரும் கைவினை பொருட்கள் கண்காட்சி

X
புதுச்சேரியில் 

புதுச்சேரியில்  கைவினைக் கலைஞர்கள் கண்காட்சி

Puducherry Handy graft Exabhition | கிராஃப்ட் கவுன்சில் ஆஃப் புதுச்சேரி சார்பில் புதுவானம் கிராப்ஸ் கைவினைப் பொருட்கள் பஜார் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் கைவினைப் பொருட்கள் கட்டடத்தில் நடைபெறும் கைவினை பொருட்கள் கண்காட்சியை அமைச்சர் லட்சுமி நாராயணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி சுற்றுலா தளங்களுக்கு மட்டுமின்றி கைவினைப் பொருட்களுக்கும் பெயர் போன மாநிலமாக உள்ளது. இங்குள்ள கைவினை கலைஞர்கள் பானை முதல் துணிகள் எலக்ட்ரிக்கல் பொருட்கள் பெண்கள் அணியும் ஆபரணங்கள் உட்பட அனைத்து பொருட்களையும் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி கைவினைப் பொருட்களை தயார் செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நிலையில் கைவினைப் பொருட்களுக்கும் அதை தயார் செய்யும் கலைஞர்களுக்கும் முக்கிய தத்துவம் அளித்திடும் பொருட்டு கிராப்ஸ் ஆப் கவுன்சில் புதுச்சேரி சார்பில் கடற்கரை காந்தி திடல் அருகே உள்ள கைவினைப் பொருட்கள் கட்டடத்தில் புதுவானம் கிராஃப்ட்ஸ் பஜார் தொடங்கியது. இந்த பஜாரை அமைச்சர் லட்சுமி நாராயணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் இதில் பல்வேறு மாநில கைவினை கலைஞர்களின் கை வண்ணத்தில் உற்பத்தியான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Puducherry