முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை.. குதூகலித்த மக்கள்!

புதுவையில் கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை.. குதூகலித்த மக்கள்!

X
புதுச்சேரி

புதுச்சேரி மழை

Puducherry News | புதுச்சேரியில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

ஆலங்கட்டி மழை வானத்திலிருந்து விழும் திடமழைப்பொழிவாகும். பந்துகளாகவோ ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை ஆலங்கட்டி மழை என்கிறோம். ஆலங்கட்டி மழை பெய்யும் போது அதனை வியப்புடன் பார்த்து மற்றவர்களிடம் கூறி மகிழ்ந்தும் வருகிறோம்.

இது மழைக் காலங்களில் எங்காவது ஒரு இடத்தில் அதிசயமாக நடக்கும் ஒரு நிகழ்வாகும். அப்படித்தான் புதுச்சேரி அடுத்த திருக்கனூர் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழை பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது.மேலும் அதை பார்த்தவர்கள் செல்போன்களில் செல்பி எடுத்தும், படம் பிடித்தும், வீடியோவாக எடுத்தும் மகிழ்ந்த நிகழ்வும் நடந்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக 100 டிகிரி செல்சியஸ் தாண்டி வெயில் கொளுத்திவருவதால் மக்கள் கடும் வெப்பத்தால் அவதி அடைந்தனர் இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் ஒருசில பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

top videos

    சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்த மக்களை மேலும் மகிழ்ச்சி அடைய செய்யும் விதத்தில் புதுச்சேரி அடுத்த திருக்கனூர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.அதாவது சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்த ஆலங்கட்டி மழை விவசாய நிலங்களில் விழும்போது பயங்கர சத்தத்துடன் விழுந்ததால் தண்ணீரை அள்ளி தெளிப்பது போன்ற அளவிற்கு அதனுடைய வேகம் இருந்தது.மேலும் சிலர் ஆலங்கட்டி மழையை வீடியோவாக எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.

    First published:

    Tags: Heavy rain, Local News, Puducherry