முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் மகாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி தாயார் திருக்கல்யாண வைபவம்...

புதுவையில் மகாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி தாயார் திருக்கல்யாண வைபவம்...

X
புதுவையில்

புதுவையில் மகாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி தாயார் திருக்கல்யாணம் விமரிசை

Pondicherry News | ரெட்டியார்பாளையத்தில் எழுந்தருளியுள்ள மகாலட்சுமி ஆலயத்தில், மகாவிஷ்ணு மற்றும் மஹாலக்ஷ்மி தாயாருக்கு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் ஸ்ரீ மகாலட்சுமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தையொட்டி திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவத்தின் ஒரு பகுதியாக மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றதை தொடர்ந்து மாலை மாற்றுதல் மற்றும் மாங்கல்ய தாணம் நடத்தப்பட்டு ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ மகாலட்சுமி தாயாருக்கு திருக்கல்யாணம் பக்தர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய அறங்காவலர் குழு நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

    First published:

    Tags: Local News, Puducherry