முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் கலந்துரையாடிய அரசு பள்ளி மாணவிகள்!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் கலந்துரையாடிய அரசு பள்ளி மாணவிகள்!

X
புதுச்சேரி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் கலந்துரையாடிய அரசு பள்ளி மாணவிகள்

Puducherry News | புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்த்த சுசிலா பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலமைச்சர் ரங்கசாமியுடன் கலந்துரையாடினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தினமும் சட்டமன்றத்திற்கு வந்து சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு அவற்றை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2 நாட்களாக புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்த்து சென்றனர்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் கலந்துரையாடிய அரசு பள்ளி மாணவிகள்

இந்நிலையில், 3ம் நாளில் புதுச்சேரி சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்த்தனர். பின்னர் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து உரையாடினர். இந்த சந்திப்பின்போது, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், மற்றும் கல்வித்துறை செயலர் ஜவகர்ஆகியோர் உடனிருந்தனர்.

First published:

Tags: Local News, Puducherry