முகப்பு /புதுச்சேரி /

கோலமாவில் ஜி 20 லோகோவை பிரம்மாண்டமாக வரைந்த புதுச்சேரி மாணவிகள்!

கோலமாவில் ஜி 20 லோகோவை பிரம்மாண்டமாக வரைந்த புதுச்சேரி மாணவிகள்!

X
கோலமாவில்

கோலமாவில் ஜி 20 லோகோவை பிரம்மாண்டமாக வரைந்த புதுச்சேரி மாணவிகள்

Puducherry News | புதுச்சேரியில் ஜி 20 லோகாவை 52 ஆயிரம் சதுர அடியில் கலர் கோலமாவை கொண்டு பிரமாண்டமாக வரைந்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உலக சாதனை படைத்த பள்ளி மாணவிகள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

ஜி 20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகித்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதிலும் முக்கிய நகரங்களில் ஜி 20 மாநாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விழிகள் அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அரசு பள்ளி மைதானத்தில் ஜி 20 லோகாவை பிரம்மாண்டமாக வரையும் நிகழ்வு நடந்தது.

இந்த முயற்சியில் சேலத்தில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி கௌசிகா, புதுச்சேரியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி வாணிஸ்ரீ ஆகியோர் இணைந்து சுமார் 52 ஆயிரம் சதுர அடியில் 35 ஆயிரம் கிலோ கலர் கோலமாவு கொண்டு ஜி 20 இலச்சினையை அதாவது லோகோவை பிரம்மாண்டமாக வரைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த கோலத்தை 24 மணி நேரத்தில் வரைந்து சாதனை படைத்தனர். இவர்களது சாதனையை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.

பின்னர் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் நேரில் வந்து உலக சாதனை நிகழ்வை பார்த்து ரசித்து மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Puducherry