முகப்பு /புதுச்சேரி /

நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தகோரி புதுச்சேரியில் காந்தி மக்கள் இயக்கம் போராட்டம்..

நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தகோரி புதுச்சேரியில் காந்தி மக்கள் இயக்கம் போராட்டம்..

X
மாதிரி

மாதிரி படம்

Gandhi Makkal Iyakkam Protest in Pondicherry | நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த கோரி புதுச்சேரியில் மாற்றுத்திறனாளி ஒற்றைக்காலில் நின்று  போராட்டத்தில் ஈடுபட்டார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி காந்தி மக்கள் இயக்கம் சார்பில் நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் போராட்டம் நடந்தது.

அதன்படி, அண்ணா சிலை அருகே நடைபெற்ற போராட்டத்தில் காந்தி மக்கள் இயக்க நிறுவனர் வேனு. ஞானமூர்த்தி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

புதுச்சேரியில் காந்திய மக்கள் இயக்கம் போராட்டம்

அப்போது போராட்டத்தில் கலந்துகொண்ட காந்தி மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தொண்டர் ஒருவர் தலையில் அணிந்திருக்கும் தொப்பி மற்றும் அணிந்திருக்கும் சட்டையின் மற்றும் பின்புறங்களில் மது மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மாற்றுத்திறனாளியயான இவர், ஊன்றுகோல் துணையுடன் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தார். இவரின் போராட்டத்தை சாலையில் சென்ற அனைவரின் கவனங்களையும் ஈர்த்தது.

    First published:

    Tags: Local News, Puducherry