முகப்பு /புதுச்சேரி /

மிரட்ட வந்துள்ள H1N1 வைரஸ் தொற்று.. புதுச்சேரியில் காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்..

மிரட்ட வந்துள்ள H1N1 வைரஸ் தொற்று.. புதுச்சேரியில் காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்..

X
மாதிரி

மாதிரி படம்

Free Medical Camp : நாடு முழுவதும் பரவும் H1N1 வைரஸ் தொற்றில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை பாதுகாக்க புதுவையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

நாடு முழுவதும் H1N1 வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை ஐந்து பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் நகரப் பகுதிகளில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தியது. பெண் காவலர்களுக்கு திருவள்ளுவர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை காவல் கண்காணிப்பாளர் ஸ்வாதி தொடங்கி வைத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இந்த முகாமில் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு பரிசோதனைகளும் நடைபெற்றது. மேலும் காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் மருத்துவர்களால் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

First published:

Tags: Local News, Puducherry