முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி அரியாங்குப்பம் அரிக்கமேடு பகுதியில் திடீர் காட்டுத்தீ.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

புதுச்சேரி அரியாங்குப்பம் அரிக்கமேடு பகுதியில் திடீர் காட்டுத்தீ.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

X
காட்டு

காட்டு தீ விபத்து

Puducherry Fire accident | காட்டுத்தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினரால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட அரிக்கமேடு பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்கள் வணிகம் செய்த இடம் தற்போது அகழாய்வு மற்றும் சுற்றுலாத் தலமாக உள்ளது.

மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் அடர்ந்த மரங்களுடன் காட்டுப்பகுதி உள்ளது. இந்நிலையில் அரிக்கமேடு பகுதியில் உள்ள அடர்ந்த மூங்கில் மரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

First published:

Tags: Fire accident, Forest, Local News, Puducherry