முகப்பு /புதுச்சேரி /

”தமிழ் கலாச்சாரம் பிடிச்சு போச்சு” தமிழர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்ட இங்கிலாந்து காதலர்கள்!

”தமிழ் கலாச்சாரம் பிடிச்சு போச்சு” தமிழர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்ட இங்கிலாந்து காதலர்கள்!

X
இங்கிலாந்து

இங்கிலாந்து காதல் ஜோடிகள்

Pondicherry Auroville | பாண்டிச்சேரி ஆரோவில்லில் தமிழ் பாரம்பரியத்தின் மீது கொண்ட காதலால் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் தமிழர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் மைக்கேல் இவரது மகன் ஆலன். இவரும் இங்கிலாந்தில் உள்ள லியோ என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரோவில் வந்த இவர்கள் இங்கேயே தங்கினர்.

ஆலன் ஆரோவில்லில் விவசாய பணி செய்து வருகிறார். அவரது காதலி ஆரோவில்லில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தமிழ் மீது கொண்ட தீராக் காதல் காரணமாக தமிழர்களின் பாரம்பரிய முறைகள், உடைகள் போன்றவற்றின் ஈர்ப்பு காரணமாக அவர்கள் இருவரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இந்நிலையில் ஆரோவில் உள்ள ஒரு பள்ளியில் தமிழர்கள் முறைப்படி வேட்டி சேலை அணிந்து மாங்கல்யம் கட்டி திருமணம் செய்து கொண்டனர் இந்த செயல் அப்பகுதியில் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ் மீது கொண்ட காதலால் தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு தம்பதிகளை அப்பகுதி தமிழ் ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

First published:

Tags: Local News, Marriage, Puducherry