பல தரப்பட்ட மொழிகள், பல தரப்பட்ட கலாச்சாரங்களை, பலதரப்பட்ட உணவுகளை, பாரம்பரிய பழக்க வழக்கங்கள் ஒருங்கிணைந்து காணப்படுவது தான் புதுச்சேரியின் சிறப்பாகும். அப்படி இங்கு வசிக்கும் பலதரப்பட்ட மக்களுக்காகவும், இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்காகவும் புதுச்சேரியில் உள்ள தனியார் உணவகம் இந்தியாவின் மாநிலங்கள் அல்லது உலக நாடுகளை சாந்த உணவுகளை தயாரித்து ”உணவு திருவிழா” என்ற பெயரில் 3 மாதத்திற்கு ஒரு முறை இது போன்று உணவு திருவிழாவை நடத்தும்.
அதன்படி தற்போது இந்த உணவகத்தில் ராஜஸ்தானி உணவு திருவிழா நடைபெறுகிறது. ராயல்டியின் சின்னம் என்றால் அது ராஜஸ்தான் தான். ராஜாக்கள் மற்றும் ராணிகளின் நகரம், செழுமையான பாரம்பரியம், நாவின் சுவை மொட்டுக்களை தட்டி எழுப்பும் சுவையான உணவுகள் ஆகியவை தான் பிரபலம். ராஜஸ்தானி சமையலறையின் தனித்துவமான சுவைகள் நறுமண மசாலா மற்றும் வெவ்வேறு பகுதிகளின் தனித்துவமான பொருட்களின் கலவையாகும்.
ராஜஸ்தான் உணவுகள் அரச மரபுகள் மற்றும் செழுமையான கலாச்சாரத்திற்காக அறியப்படுகிறது.சுவையான சுர்மாவுடன் தேசி நெய்யில் துவைக்கப்பட்ட தால்-பாடி மாநிலத்தின் தனிச்சிறப்பு உணவாகும். ஆட்டு இறைச்சி மற்றும் மசாலாப் பொருட்களின் பரலோக கலவையான லால் மாஸ், காய்கறி மற்றும் மசாலாப் பொருட்களின் கலவையில் உருவான வெஜிடபிள் சப்ஜி, மிர்ச்சி வாட்ஸ் மற்றும் மாவா கச்சோரி ஆகியவற்றை நினைத்தால் வெறுமனே வாயில் நீர் வடியும்.
இதையும் படிங்க : நாமக்கல் வழியாக இயங்கும் ராமேஸ்வரம் - ஹூப்ளி விரைவு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!
மூங்கில் கிச்சடி, ராஜஸ்தானி காதி, பச்சடி மிக்ஸ், லால்சனா மசாலா, பூரி பட்டர், புல்கா கிரீன், சிப்பியா சாலட் , ரனக்பூர் பிஷன் சக்கி போன்ற தரமான சுவையான உணவு வகைகள் இந்த திருவிழாவில் இடம் பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு உணவை ஒரு பிடி பிடித்தனர்.
இந்த உணவு திருவிழாவில் அந்த காலத்தில் மகாராஜாக்களுக்கு வழங்கப்பட்ட உணவு வகைகள் தரமும் ருசியும் மாறாமல் அப்படியே இடம் பெற்று இருந்தது என்பது இந்த திருவிழாவின் தனிச்சிறப்பு. கடந்த 21ம் தேதி துவங்கிய இந்த உணவு திருவிழா மார்ச் 10ம் தேதி வரை நடைபெற இருந்தது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஹோட்டல் பொது மேலாளர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Local News, Puducherry