முகப்பு /புதுச்சேரி /

மீன் வளர்ப்பில் உள்ள பிரச்னைகளும், தீர்வுகளும்.. புதுவை பாகூர் மீன் விதை வளர்ப்பு பண்ணையில் பயிற்சி முகாம்..

மீன் வளர்ப்பில் உள்ள பிரச்னைகளும், தீர்வுகளும்.. புதுவை பாகூர் மீன் விதை வளர்ப்பு பண்ணையில் பயிற்சி முகாம்..

X
புதுவை

புதுவை பாகூர் மீன் விதை வளர்ப்பு பண்ணையில் பயிற்சி முகாம்

Puducherry News | புதுவை பாகூர் மீன் விதை வளர்ப்பு பண்ணையில் மீன் வளர்பவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் இயங்கும் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை சார்பில் உள்நாட்டு மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு பயிற்சிகள் மற்றும் மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பாகூரில் உள்ள மீன் விதை பண்ணையில், உள்நாட்டு மீன் வளர்ப்பில் உள்ள பிரச்சனைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை முதன்மை செயலாக்க அதிகாரி கோவிந்தசாமி கலந்துகொண்டு மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் அருளரசன், உள்நாட்டு மீன் வளர்பில் உள்ள பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும் குறித்து பேசினார். இந்த முகாமில், பாகூர், குருவிநத்தம், பரிக்கல்பட்டு, மணப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மீன் வளர்ப்போர் கலந்துகொண்டனர். மேலும் மீன் வளர்ப்பில் உள்ள சந்தேகங்கள் குறித்து கேட்டு அதற்கு விளக்கம் பெற்றனர்.

First published:

Tags: Local News, Puducherry