புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கல்யாண சுந்தரம். இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை சூலைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த எல்லம்மாள் என்பவருடன் வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் கல்யாணசுந்தரம் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல், பெண் வீட்டாரின் முழு சம்மதத்துடன் நடைபெற்றுள்ளது.
இதன் பிறகு கல்யாணசுந்தரம் அவ்வப்போது சென்னைக்கு சென்று மனைவியை சந்தித்து வந்துள்ளார். இதையடுத்து இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இது முதல் மனைவிக்கு தெரிய வந்ததையடுத்து இது சம்பந்தமாக கேட்டுள்ளார். மனைவியை சமாதானம் செய்த கல்யாண சுந்தரம், ‘உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறி அடிக்கடி எல்லம்மாள் வீட்டுக்கு சென்று வருவது வழக்கமாக வைத்துள்ளார். இதையடுத்து இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
கடந்த 15 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த கல்யாணசுந்தரம் தற்போது நான்கு மாதங்களாக எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முதல் மனைவி எல்லம்மாள், மகளிர் காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுத்துள்ளார்.
இதையும் படிக்க : சர்வதேச நிகழ்ச்சிகளின் மதுபானம் - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
அந்தப் புகாரில், தன் கணவர் கல்யாணசுந்தரம், இரண்டாவது மனைவி நந்தினி பேச்சை கேட்டுக் கொண்டு நான்கு மாதங்களாக தன்னிடம் பேசுவதில்லை, தன்னுடைய மொபைல் நம்பரை பிளாக் செய்துள்ளார். பலமுறை முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய வீட்டிற்கு சென்று முறையிட்டேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனால் தனக்கு நீதி கிடைக்க வேண்டும், தன் கணவர் தன்னுடன் வாழ வேண்டும், தன் பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்க வேண்டுமென கோரி மனு அளித்துள்ளார். இது தொடர்பாக கல்யாணசுந்தரம் எம்எல்ஏவை தொடர்பு கொண்டு கேட்டதற்கு சட்ட ரீதியாக சந்திப்பதாக கூறியுள்ளார்.
புதுச்சேரியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரின் முதல் மனைவி நீதி கேட்டு மகளிர் காவல் நிலையத்தில் முறையிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Puducherry, Wife compliant