முகப்பு /புதுச்சேரி /

தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு.. கிராம மக்கள் போராட்டம்!

தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு.. கிராம மக்கள் போராட்டம்!

X
தேசிய

தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்து  கிராம மக்கள் போராட்டம்.

Pudukkottai protest | கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட கெங்கராம்பாளையம் பகுதியில் சுங்க சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழி சாலை பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட கெங்கராம்பாளையம் பகுதியில் சுங்க சாவடி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் அதை கண்டு கொள்ளாமல் சுங்க சாவடி அமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டனர்.

சுங்கச்சாவடி அமைக்கும் பணிகளுக்கு சாலையின் இரு புறங்களிலும் அதிக அளவில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி அளவீடு செய்து பணிகளை ஒப்பந்ததாரர்கள் துரிதப்படுத்தினர்.இந்நிலையில் சுங்க சாவடி பணி அமைப்பதற்காக அளவீடு செய்த இடத்தில் பில்லர்கள் எழுப்புவதற்கு பள்ளம் தோண்டப்பட்டது அப்பொழுது அளவீடு செய்த இடத்தையும் மீறி அதிக அளவில் விவசாய நிலத்தை கையகப்படுத்துவதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் விஜயா, பால சுந்தரமூர்த்தி, துளசிங்க பெருமாள் ஆகியோர் அங்கிருந்த பள்ளத்தை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வளவனூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரிடம் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க செயலாளர் முருகையன் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் ஜெயகோபி, ரவி, கோபாலகிருஷ்ணன், வெங்கடேசன், ஹரிதாஸ், ரவிச்சந்திரன், மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் தெரிவித்த போது “உடனடியாக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும் என்றும் மூடவில்லை என்றால் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் அடுத்து முன்னெடுக்கப்படும்” என தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Protest, Puducherry