முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் வெளியான பத்து தல திரைப்படம்.. பேனருக்கு பாலாபிஷேகம் செய்த சிம்பு ரசிகர்கள்!

புதுவையில் வெளியான பத்து தல திரைப்படம்.. பேனருக்கு பாலாபிஷேகம் செய்த சிம்பு ரசிகர்கள்!

X
புதுவையில்

புதுவையில் வெளியான பத்து தல திரைப்படம்

Puducherry News | நடிகர் சிலம்பரசன் நடிப்பில்  திரைக்கு வந்த 10 தல திரைப்படம் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

நடிகர் சிலம்பரசன் நடித்த பத்து தல திரைப்படம் வெற்றி பெற புதுச்சேரி ரசிகர்கள் ஆதரவற்ற இல்லங்களில் அன்னதானம் மற்றும் நடுக்கடலில் பேனர் என 2 நாட்களுக்கு முன்னரே பிரமாண்ட ஏற்பாடுகள் செய்ய தொடங்கினர்.

இந்நிலையில், பத்து தல திரைப்படம் நாடு முழுவதும் வெளியானது. புதுச்சேரியில் காமராஜர் சாலையில் உள்ள ஜீவா ருக்மணி திரையரங்கில் 10 தல படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து புதுச்சேரி தலைமை ரசிகர் மன்றம் சார்பில் திரையரங்கின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டு இருந்த பேனர்களுக்கு ரசிகர் மன்ற சார்பில் பால் அபிஷேகம் செய்யப்பட்டு 10 தல என்பதை கூறும் விதமாக 10 தேங்காய், 10 பூசணிக்காய், ஆகியவை உடைக்கப்பட்டு பட்டாசுகள் வெடித்தும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

top videos

    இதனைத்தொடர்ந்து திரையரங்கம் முன்பு ஒன்று கூடிய ரசிகர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து சாலையில் செல்வோருக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

    First published:

    Tags: Local News, Puducherry, Tamil Cinema