எந்த நோயை விடவும் கொடுமையானது பசி என்று வள்ளலார் சொன்னார். அதன்படி சாதி, மத பேதமில்லாமல் எந்த உயிரையும் தன்னுயிர் போல் கருதி உணவளித்து சமத்துவ சிந்தனையோடு வாழ்பவரின் உள்ளத்தில் தான் இறைவன் இருக்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல பசிப்பிணி போக்கி வருகிறார் புதுச்சேரியில் ஒருவர்.
வாட்டிய வறுமை
புதுச்சேரி திலாசுபேட்டையை சேர்ந்த சங்கர் 8ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். இவர் பள்ளியில் படிக்கும்போது இவரின் தந்தை இறந்துவிட்டார். அப்போது உணவுக்கு வழி இன்றி ஏழ்மை நிலையில் இருந்து வந்ததால் சங்கரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அப்போதில் இருந்தே, அவர் சாப்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்து பலருக்கும் உதவிகளை செய்து வருகிறார்.
எங்கு உள்ளது?
இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் வழியில் தட்டாஞ்சாவடியில் 150க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி அரசின் முக்கிய அலுவலகங்கள் போன்வை உள்ளன. இதனால், இந்த பகுதியில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம்.
இதையும் படிங்க : பேருந்துகளுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்.. விழுப்புரத்தில் அதிரடி..
ஆனால் இங்கு வருபவர்களுள் பலருக்கு, பெரிய ஹோட்டல்களில் சாப்பிடும் அளவிற்கு பணம் இல்லாததால் சாலை ஓரத்தில் உள்ள ஹோட்டல்களை நம்பியே வருகின்றனர். அப்படிவர்களுக்கு உதவியாக, தட்டாஞ்சாவடியில் சாலை ஓரத்தில் தள்ளு வண்டியில் கடந்த 15 ஆண்டுகளாக தனது சிறிய உணவகத்தை நடத்தி வருகிறார் சங்கர்.
என்னென்ன உணவுகள்
இவர், காலை நேரத்தில் இட்லி வடை, சாம்பார், பூரி எனவும் மதிய நேரத்தில் தக்காளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் சாதம், மீன் குழம்பு சாப்பாடு என விற்பனை செய்து வருகிறார். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால் மீன் குழம்புடன் அளவு சாப்பாடு 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
இவரிடம் மேலும் அளவில்லா சாப்பாடு சாப்பிட வேண்டுமென்றால் மீன் குழம்பு சாம்பார், ரசம், மோர், 2 வகையான கூட்டு, பொரியல், ஒரு முட்டையுடன் 30 ரூபாய்க்கு கொடுத்து வருகிறார்.
அந்த மனசு தான் கடவுள்
தங்களிடம் காசு இல்லை என்று சிலர் வந்தால் கூட, அதை மனமுவந்து மனமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அவர்களுக்கும் உணவு கொடுத்து அவரும் மனம் மகிழ்கிறார். இவ்வாறு தன்னை நாடி வருபவர்களையும் வயிறு நையை செய்து இவர் மனநிறைவடைகிறார். இதனை கடந்த 15 ஆண்டுகளாக, சங்கர் தனது மனைவி ரேவதியுடன் சேர்ந்து தொழிலை ஒரு சேவையாகவே செய்து வருகிறார்.
15 ஆண்டுகள் சேவை
இதுகுறித்து சங்கர் கூறுகையில், “நான் சிறுவயதில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நிலையில், தனது அப்பா இறந்துவிட்டார். அப்போது சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நான், எனது படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டேன். அதன் பிறகு சாப்பாட்டால் ஒருவர் பாதிக்கப்படக்கூடாது என்று அப்போதே என் மனதுக்குள் தோன்றியது. அதன் பிறகு, திருமணம் செய்து கொண்ட நான் கடந்த 15 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்து பசியாற வைத்து வருகிறேன்.
இதில் எனக்கு லாபம் கிடைக்குதா என்று நான் நினைக்கவில்லை, சாப்பிடும் போது அவர்களிடம் மன நிறைவோடு சாப்பிடுகிறார்கள் அதை என்னால் நிறைவோடு பார்க்க முடிகிறது. அது மட்டும் இல்லாமல் சில பேர் சாப்பிட்டு விட்டு காசு இல்லை என்று கூட சொல்வார்கள். அதையும் நான் பெரிது படுத்துவதில்லை, சரி நாளைக்கு வந்தால் கொடுங்கள் என்று கூறி அனுப்பி இருக்கிறேன்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
30 ரூபாய்க்கு அளவில்லா சாப்பாடு வழங்கி வருகிறேன். கொரோனா காலத்தில் கூட எல்லா கடைகளும் மூடி இருந்தன. அப்போதும் கூட பத்து ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்தேன். இப்டியாக இந்த ஹோட்டல் தொழிலை ஒரு சேவையாக செய்து வருகிறேன்” என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Local News, Pondicherry, Puducherry