முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி முத்தியால்பேட்டை அரசு மருத்துவமனையில் காலாவதி மாத்திரைகள் விநியோகம்..

புதுச்சேரி முத்தியால்பேட்டை அரசு மருத்துவமனையில் காலாவதி மாத்திரைகள் விநியோகம்..

X
மாதிரி

மாதிரி படம்

புதுச்சேரியில் காய்ச்சல் மற்றும் தொண்டை வலிக்கு மாத்திரை வாங்க சென்றவருக்கு காத்திருந்த ஆபத்து

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 100-லிருந்து 200-பேர் வரை தினமும் வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர். மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியின்போது மருத்துவர்கள் இருப்பதில்லை. எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாமலும் இருப்பதாகவும், காலாவதியான மாத்திரைகளை வழங்குவதாகவும் பரவலாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 26 வயதான மகேஷ் என்ற வாலிபர் காய்ச்சல் மற்றும் தொண்டை வலிக்காக மருத்துவரை அணுகி உள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவருக்கு 2 விதமான மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளார். அந்த சீட்டுடன் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே அவர் மருந்து மாத்திரைகள் வாங்கி உள்ளார்.

ஆனால் மாத்திரையை பிரித்து பார்த்தபோது அவை கரும்புள்ளிகள் உடன் காலாவதி ஆகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் பணியில் இருந்த மருத்துவரை பார்த்து ஏன் காலாவதியான மாத்திரைகளை வழங்குகிறீர்கள்? உடல்நிலை சரியில்லை என்று தானே இங்கு வருகிறோம். நீங்கள் இப்படி செய்தால் எப்படி? என்று கேட்டுள்ளார். ஆனால் இதற்கு கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காமல் அரசு மருத்துவர் பொறுப்பில்லாத பதில் அளித்துள்ளார். இவை அனைத்தையும் வீடியோவை அந்த வாலிபர் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : 6 மணி நேரத்தில் அதிரவைத்த 2 கொலைகள், 1 துப்பாக்கிச்சூடு.. திண்டுக்கல்லில் பயங்கரம்!

மேலும் இதுகுறித்து மகேஷ் கூறும்போது, “நான் காய்ச்சல் மற்றும் தொண்டை வலிக்காக மருத்துவம் பார்க்க வந்தேன். எனக்கு காலாவதியான மாத்திரைகளை வழங்கி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செயல்படுகின்றனர்” என குற்றம் சாட்டினார். எனவே இதன் மீது புதுச்சேரி அரசும் சுகாதார துறையும் தனி காவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

First published:

Tags: Local News, Puducherry