முகப்பு /புதுச்சேரி /

புழு, பூச்சிகளுடன் வந்த குடிநீர்.. போராட்டத்தில் ஈடுபட்ட நடுவனந்தல் கிராம மக்கள்..

புழு, பூச்சிகளுடன் வந்த குடிநீர்.. போராட்டத்தில் ஈடுபட்ட நடுவனந்தல் கிராம மக்கள்..

X
புழு,

புழு, பூச்சிகளுடன் வந்த குடிநீர்

Pondicherry News : புதுச்சேரி அருகே, பழுதடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடிக்க கோரியும், அந்தத் தொட்டியில் இருந்து புழு, பூச்சிகளுடன் குடிநீர் விநியோகிப்படுவதை கண்டித்தும் கிராம மக்கள்  போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த நடுவனந்தல் கிராமத்தில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாலும், மேற்கூரை இல்லாததால் வலை அமைத்து மேற்பரப்பில் மூடி வைக்கப்பட்டிருப்பதால் பூச்சி மற்றும் புழுக்கல் குடிநீரில் கலந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் மயிலம் ஒன்றிய குழு பெருந்தலைவரிடம் முறையிட்டும் கடந்த 6 மாதங்களாக எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

ஆகவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் தனியல் கிராமத்திற்கு நடுவனந்தல் வழியாக செல்லும் அரசு நகர பேருந்தை (தடம் எண் 11) சிறை பிடிக்க முடிவு செய்து, வன்னியர் கோட்டை பகுதியில் ஒன்று திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்கள் மற்றும் மயிலம் சேர்மனிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் மேற்கூரை இல்லாத மேல்நிலை நீர்த்தேக்கப்பட்டிக்கு தற்காலிகமாக ஷீட் அமைத்துதரப்படும் எனவும், விரைவில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry