முகப்பு /புதுச்சேரி /

3 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு.. புதுச்சேரி அருகே தவித்து நிற்கும் கிராம மக்கள்..

3 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு.. புதுச்சேரி அருகே தவித்து நிற்கும் கிராம மக்கள்..

X
மாதிரி

மாதிரி படம்

Puducherry News | புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான இரட்டணை பகுதியில் தொடர்ந்து 3 தினங்களாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான இரட்டணை கிராமத்தில் 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மீனவர் தெரு கிழக்கு தெரு, மேட்டு தெரு, அண்ணா நகர், ராஜீவ் நகர், புது காலனி, பழைய காலனி, குளக்கரை, தங்கசாலை என 9 இடங்களில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 3 தினங்களாக இப்பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயில் நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து செல்லும் நிலை உள்ளது.

இந்த பகுதியிலும் 10 நிமிடம் மட்டுமே குடிநீர் வருகிறது என்றும், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் சரிவர சுத்தம் செய்யப்படாததால் புழுக்களும், பாசியும் இந்த குடிநீரில் சேர்ந்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டாலும் தகுந்த பதில் வரவில்லை எனவும், குடிநீர் வரவில்லை என்றால் BDO விடம் முறையிடுங்கள். கலெக்டரிடம் முறையிடுங்கள் என தலைவர் பதில் அளிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்கள் சென்னையில் இருப்பதாகவும், இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறினர். இப்பகுதி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து தவித்த வாய்க்கு தண்ணீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Puducherry