முகப்பு /புதுச்சேரி /

புதுவை வில்லியனூர் பள்ளியில் ஓவிய கண்காட்சி! கண்ணை கவர்ந்த மாணவர்களின் கைவண்ணம்..

புதுவை வில்லியனூர் பள்ளியில் ஓவிய கண்காட்சி! கண்ணை கவர்ந்த மாணவர்களின் கைவண்ணம்..

X
புதுவை

புதுவை வில்லியனூர் பள்ளியில் ஓவிய கண்காட்சி

வில்லியனூர் புனித லூர்து அன்னை அரசு உதவி பெறும் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெறும் ஓவிய கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி வில்லியனூர் புனித லூர்து அன்னை அரசு உதவி பெறும் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் 3  நாட்கள் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்திரு ஜோசப் சகாயராஜ் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் அருட்திரு‌ பிச்சைமுத்து முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட 4ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் சொக்கலிங்கம் ரிப்பன் வெட்டி கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டு பரிசு, சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இதனைத்தொடர்ந்து, புதுச்சேரி மாநில ஓவியர் மன்ற தலைவர் கலைமாமணி ஏ.பி. இபேர் வாழ்த்துரை வழங்கினார். 165 மாணவர்களின் 625 ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றது. இதில் பென்சில் கலர், கிரேயான், ஆயில் பேஸ்டல், நீர்வர்ணம் ஆகிய முறைகளில் மாணவர்கள் ஓவியங்களை வரைந்துள்ளனர். அறிவியல், சுற்றுச்சூழல், தண்ணீர் சேமிப்பு, விளையாட்டு, விழிப்புணர்வு, தேச தலைவர்கள், விலங்குகள், பறவைகள், ஆன்மிகம், இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஓவியக் கண்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன.

165 மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் தேர்வு பெற்ற 51 ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக ஓவிய ஆசிரியர் சிவநேசன் வரவேற்றார். ஆசிரியர் துரை. ரங்கநாதன் நன்றி கூறினார். ஓவிய கண்காட்சியானது கடந்த 17, 18, 19 ஆகிய 3 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Puducherry