முகப்பு /புதுச்சேரி /

சொரப்பூர் ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

சொரப்பூர் ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

X
சொரப்பூர்

சொரப்பூர் ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

Draupadi Dhevi Temple : புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் அருகில் உள்ள சொரப்பூர் கிராமத்தில் ஸ்ரீதர்மராஜா ஸ்ரீதிரௌபதி தேவி மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பக்கம் அருகில் உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் வட்டம் சொரப்பூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீயுதிஷ்டிர பீமாார்ஜுன நகுலசகாதேவ சமேதஸ்ரீ தர்மராஜா ஸ்ரீதிரௌபதி தேவி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மே 30ம் தேதி ஸ்ரீமகா கணபதி ஹோமம், மகா சுதர்சன ஹோமம், தான கிருஷ்ண ஜன அஸ்கர்ண ஹோமம், மகாபாரண உதவி கந்த திருதுளை பிரசாதம் வினியோகம் மற்றும் முதல் யாகசாலை, 2ம் யாகசாலை, 3ம் யாக சாலை என்று தொடங்கியது.

கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டவர்கள்

இதனைத்தொடர்ந்து காலை 5 மணி அளவில் யாக சாலைகளில் உள்ள கும்பங்களுக்கும் தீபாரதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மேளதாளங்களுடன் கலச புறப்பாடு யாகசாலையில் இருந்து புறப்பட்டு சன்னதியில் உள்ள அனைத்து பரிவார மூர்த்திகளின் மூலவர்களுக்கும் மற்றும் விமான கோபுரங்களிலும் மற்றும் கொடி மரத்திற்கும் ஸ்ரீவிநாயகர் திரௌபதி தேவி ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு வேத சாற்றுமுறைப்படி புனித தீர்த்த ஊற்றப்பட்டது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்த கோடிகள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். இதனைத்தொடர்ந்து சன்னதியில் அன்னதானமும் நடைபெற்றது. இந்த ஏற்பாட்டினை சொரப்பூர் கோவில் அறங்காவலர் குழு மற்றும் ஊர் பெரியவர்கள் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Puducherry, Religion18