முகப்பு /புதுச்சேரி /

அம்பேத்கர் பிறந்தநாள் விழா... புதுச்சேரியில் நடனமாடி கொண்டாடிய இளைஞர்கள்!

அம்பேத்கர் பிறந்தநாள் விழா... புதுச்சேரியில் நடனமாடி கொண்டாடிய இளைஞர்கள்!

X
அம்பேத்கர்

அம்பேத்கர் பிறந்தநாள் விழா

Pondicherry News | புதுச்சேரி சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்பு இளைஞர்கள்  முதல் பெரியவர்கள் வரை நடனம் ஆடி அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடினர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சட்டசபை எதிரே உள்ள அவரது முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதே போன்று புதுச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக, திமுக, உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும், மாணவர்கள் அமைப்பினரும் அம்பேத்கர் படத்தை ஊர்வலமாக கொண்டு வந்து அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் பல்வேறு கூட்டமைப்புகள்சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அவரது உருவப்படத்தை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ரத ஊர்வலமாக அண்ணாசாலையில் இருந்து புறப்பட்டு, நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சட்டசபை முன்பு வந்தடைந்தது.

இதனையடுத்து ரத ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளசுகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் என அனைவரும் சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு குத்தாட்டம் போட்டு தெறிக்கவிட்டு, நடனம் ஆடியது அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதை பலரும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Ambedkar, Local News, Puducherry