முகப்பு /புதுச்சேரி /

24 மணிநேர இலவச வைஃபை (Wi-Fi) வசதி.. புதுச்சேரியில் எங்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

24 மணிநேர இலவச வைஃபை (Wi-Fi) வசதி.. புதுச்சேரியில் எங்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

X
24

24 மணிநேர இலவச வைஃபை

24 Hours Free Wi-Fi is Available In Pondicherry | புதுச்சேரியில் உள்ள சில இடங்களில் 24 மணிநேர இலவச வைஃபை (Wi-Fi) வசதி சுற்றுலாதுறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி சுற்றுலா என்றாலே அனைவருக்கும முதலில் நினைவுக்கு வருவது கடற்கரைதான். கடற்கரையில் புதுச்சேரி அரசு சார்பாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் மிக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் புதுச்சேரி சுற்றுலா துறை சார்பாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடற்கரை சாலையில் free Wi-Fi வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது கடற்கரை சாலை முழுவதுமாக கிடைக்குமா என்ற கேள்வி எழும் அதுதான் இல்லை, ஒரு சில பகுதிகள் மட்டுமே கிடைக்கும்.

சுற்றுலாத் துறை அலுவலகம் அருகில் இந்த free Wi-Fi வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பழைய துறைமுகம் பகுதியிலும் இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவச வைபை வசதியை பெற, 97 87 71 33 33 என்கின்ற எண்ணிற்கு நம் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தால் அதிலிருந்து நமக்கு ஒரு ஐந்து இலக்கு எண் நம்பர் மெசேஜில் வரும். அந்த ஐந்து இலக்கு எண்ணை நாம் தொலைபேசியில் என்டர் செய்தால் நமக்கு ஃப்ரீ வைபை வசதி உடனே கிடைத்துவிடும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த இலவச Wi-Fiவசதி 24 மணி நேரமும் பயன்படுத்திக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைஃபை வசதி சுற்றுலா பயணிகளின் மற்றும் பொது மக்களையும் மிகவும் கவர்ந்துள்ளது.

First published:

Tags: Local News, Puducherry