முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் ஒரு பிச்சாவரம் இருக்கு தெரியுமா? அலையாத்தி காடுகளுக்கிடையே அழகிய படகு பயணம்..

புதுச்சேரியில் ஒரு பிச்சாவரம் இருக்கு தெரியுமா? அலையாத்தி காடுகளுக்கிடையே அழகிய படகு பயணம்..

X
புதுச்சேரியில்

புதுச்சேரியில் ஒரு பிச்சாவரம் இருக்கு தெரியுமா?

Pichavaram in Pondicherry | புதுச்சேரியில பிச்சாவரம் இருக்கு தெரியுமா.....?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

பாறைகளில் அலைகள் மோதும் கடற்கரை, நேர் நேராக நீண்டிருக்கும் வீதிகள், பிரெஞ்சுகாரர்களின் வரலாற்று சுவடுகள் உள்ள கட்டிடங்கள், அரியவகை மரங்கள், செடிகள் நிரம்பிய தாவரவியல் பூங்கா, கடலும் ஆறும் சேரும் இடத்தில் அமைந்துள்ள பாரடைஸ் தீவு இப்படி பல்வேறு அழகிய இடங்கள் நிறைந்து இருக்கும் நகரம் தான் புதுச்சேரி.

இந்த இடத்திற்கு நேரில் பார்க்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் ஒரு அனுபவத்தை தரும் வகையில் சுற்றுலாத்துறை சார்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரத்தைபோல் மாங்குரோவ் காடுகளுக்குஇடையே படகு சவாரி செய்யும் த்ரில்லான அனுபவம் தற்போது புதுச்சேரியிலும் கிடைக்கும்.

புதுவை முருங்கப்பாக்கத்தில் உள்ள கைவினைஞர்கள் கிராமம் தற்போது வளர்ந்து வரும் முக்கிய கலை கேந்திரமாக உள்ளது. இங்கு பல்வேறு கைவினை கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக மாங்குரோவ் காடுகளில் படகு பயணத்தை மேற்கொள்ளும் படகு குழாம் இதன் உள்ளே உள்ளது.

புதுச்சேரி அலையாத்தி காடுகள்

கட்டணம் எவ்வளவு?

சுற்றுலா துறையின் வழிகாட்டலில் வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர் குமரன் தலைமையில் இங்கு 15க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். படகில் திரில்லான சவாரி செய்வதற்கு ஒன்றிலிருந்து 6 நபர்களுக்கு 900 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

என்ன பார்க்கலாம்?

சவாரி செய்யும் பயணிகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க பழங்கால அரிக்கமேடு துறைமுகம் வழியாக சென்று தேங்காய் திட்டு மீன் பிடி துறைமுகத்தை பார்வையிட்டு அங்கிருந்து மாங்குரோவ் காட்டின் இடையே பயணிக்கலாம். மாங்குரோவ் காடுகளுக்குள் நுழைந்ததும் நமக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கிறது.

இதுகுறித்து மீனவர் குமரனிடம் கேட்டபோது, “அரசாங்க உத்தரவின்படி பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த படகு குழாமில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது சுமார் 2 மணி நேரம் படகு பயணம் செல்கிறது. மேலும் அரிக்கமேடு, துறைமுகம், மாங்குரோவ் காடுகள் பல்வேறு இடங்களிலும் த்ரில்லான பயணத்தை அனுபவிக்கலாம். இந்த பயணத்தில் கடல் பறவைகளையும் கூட பார்க்கலாம். மாங்குரோவ் காடுகளின் இடையே தண்ணீருக்கு மேலாக மரங்களால் ஆன நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புன்னை மரங்களின் நடுவே தண்ணீரின் மேலே நடந்து செல்லும் ஒரு அற்புத உணர்வையும் பெற முடியும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து புதுவையில் ஒரு பிச்சாவரம் என்ற படகு குழாம் வெளிநாடு, வெளிமாநிலத்தை, சேர்ந்தவர்களை மட்டுமே இது கவர்ந்துள்ளது. ஆனால் புதுவையில் இருப்பவர்களுக்கு இதைப் பற்றி சிறிதளவுக்கு கூட தெரியவில்லை” என்று வருத்தப்பட்டார் மீனவர் குமரன். இந்த த்ரில்லான படகு சவாரி செய்தால் புதிய அனுபவத்தையும், அற்புத உணர்வையும் பெற முடியும் எனவும் அவர் கூறினார்.

First published:

Tags: Local News, Puducherry