முகப்பு /புதுச்சேரி /

ஏழை மாணவர்களை வாத்தி திரைப்படத்திற்கு அழைத்து சென்ற தனுஷ் ரசிகர்கள்!

ஏழை மாணவர்களை வாத்தி திரைப்படத்திற்கு அழைத்து சென்ற தனுஷ் ரசிகர்கள்!

X
வாத்தி

வாத்தி திரைப்படம் பார்த்து மகிழ்ந்த மாணவர்கள்

Puducherry | ஏழை மற்றும் ஆதரவற்ற மாணவர்களை தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படத்திற்கு இலவசமாக அழைத்து சென்ற தனுஷ் ரசிகர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட்ட தனுஷ் ரசிகர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நடிகர் தனுஷ் நடித்து கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வாத்தி திரைப்படம் தமிழகம் மற்றும் புதுவை உட்பட பல்வேறு மாநிலங்களில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் கல்வி கற்பது மற்றும் அதன் அவசியம் குறித்து பல்வேறு நல்ல கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக தனுஷ் ரசிகர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் படம் வெளியான முதல் நாளன்று புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் சார்பாக ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து ஆதரவற்ற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் சுமார் 70 க்கும் மேற்பட்டோரை நடிகர் தனுஷ் ரசிகர் மன்ற சார்பாக திருவள்ளூர் சாலையில் உள்ள திரையரங்கிற்கு அழைத்துச் சென்று வாத்தி திரைப்படத்தை இலவசமாக காண்பித்தனர்.

First published:

Tags: Actor Dhanush, Puducherry, Theatre