முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் தீப்பொறி பறக்க தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்!

புதுவையில் தீப்பொறி பறக்க தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்!

X
தீமிதி

தீமிதி திருவிழா

Pondicherry News | கணுவாப்பேட்டையில் எழுந்தருளி இருக்கும்  திரௌபதியம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கொம்யூன், கணுவாப்பேட்டையில் எழுந்தருளி இருக்கும் திரௌபதியம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

புதுச்சேரி கணுவாப்பேட்டையில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக துவஜாரோகணம் நிகழ்ச்சியும் , அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீதியாக சுவாமிக்கு உற்சவம் நடைபெற்றது.

மேலும் முக்கிய நிகழ்வாக பக்காசூரனுக்கு சாதம் போடுதல், பாஞ்சாலி திருக்கல்யாணம், கோட்டை வளர்த்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து முக்கிய விழாவாக தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க | பங்குனி உத்திரம்: புதுச்சேரியில் அவதாருடன் அவதரித்த முருகனை வியந்து பார்த்த பக்தர்கள்..!

அதேபோல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பட்டினை ஆலய சிறப்பு அதிகாரி சந்திரதரன் மற்றும் கணுவாப்பேட்டை கிராமவாசிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry