முகப்பு /புதுச்சேரி /

கோவில் குளத்தில் செத்து மிதந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்கள்.. இதுதான் காரணம்?

கோவில் குளத்தில் செத்து மிதந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்கள்.. இதுதான் காரணம்?

X
கோவில்

கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

Dead Fishes In Temple Pond | கோவில் குளத்தில் செத்து மிதந்த 3 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்கள்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி பாகூர் தொகுதிக்குட்பட்ட கன்னிக்கோவில் பச்சைவாழி அம்மன் கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. அதில் கடந்த ஆண்டு கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்த காசிநாதன் என்பவர் ஏலம் எடுத்து அந்த குளத்தை தூர்வாரி மீன் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விட்டார்.

நன்கு வளர்ந்த நிலையில் உள்ள மீன்களை அடுத்த மாதம் குளத்திலிருந்து பிடிக்கலாம் என்று காசிநாதன் நினைத்து இருந்த நிலையில் திடீரென 600-க்கும் மேற்பட்ட மீன்கள் குளத்தில் செத்து மிதந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என காசிநாதன் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், மர்ம நபர்கள் விஷம் கலந்து இறந்ததா? அல்லது வேறு காரணங்களால் இறந்ததா? என விசாரணை நடத்துமாறு கிருமாம்பாக்கம் போலீசாரிடம் காசிநாதன் புகார் அளித்தார்.

    First published:

    Tags: Local News, Puducherry