முகப்பு /புதுச்சேரி /

ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்.. புதுச்சேரியில் ஆய்வு செய்யும் மீன்வளத்துறை அதிகாரிகள்!

ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்.. புதுச்சேரியில் ஆய்வு செய்யும் மீன்வளத்துறை அதிகாரிகள்!

X
ஏரியில்

ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

Dead Fish Floating In The Pondicherry Lake : புதுச்சேரி மாநிலம் கீழ்பரிக்கள்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் வளர்க்கட்டு வந்த மீன்கள் செத்து மிதந்ததால், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதிக்கு உட்பட்ட கீழ்பரிக்கள்பட்டு கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி மீன் வளர்ப்பு குத்தகைக்கு விடப்பட்டது.

இதில் பாகூரை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் 2 நபர்கள் சேர்ந்து மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தனர். தற்போது மீன்கள் நன்கு வளர்ந்த நிலையில் மீன்கள் விற்பனைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில், ஏரியில் இருந்த ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன. ஆறுமுகம் ஏரிக்குச் சென்று பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அவர் பின்னர் நண்பர்களை அழைத்து இறந்த மீன்களை எல்லாம் அப்புறப்படுத்தினார்.

ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

இதுகுறித்து மீன்வளத்துக்கும், சுகாதாரத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் பரிக்கப்பட்டு ஏரியிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு மீன்கள் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 வருட காலமாக ஏரியில் ஆகாயத்தாமரை அதிகமாக வளர்ந்துள்ளன. மேலும், சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாகவும் மீன்கள் இறந்திருக்குமோ என்று குத்தகைதாரர்கள் சோகத்தில் உள்ளனர். இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான காரணத்தை அறிய அப்பகுதியில் உள்ள மீன் குத்தகைதாரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Puducherry