முகப்பு /புதுச்சேரி /

பிணவறை வாசலில் கிடத்தப்பட்ட உடல்... புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லாததால் ஏற்பட்ட அவலம்..!

பிணவறை வாசலில் கிடத்தப்பட்ட உடல்... புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லாததால் ஏற்பட்ட அவலம்..!

X
ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் இருந்தும் ஓட்டுநர் இல்லை - மருத்துவமனையில் காத்திருந்த உடல்

Pondicherry News | புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இருந்தும் ஓட்டுநர் இல்லாத காரணத்தால் 1 மணி நேரத்திற்கு மேலாக உயிரிழந்தவரின் உடல் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி, உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிங்காரம் (51). இவருக்கு 2 சிறுநீரகங்களும்  செயலிழந்த நிலையில், கடந்த 4 நாட்களாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இன்று (மார்ச் 10) மாலை 4.30 மணியளவில் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்த சிங்காரத்தின் உடலை பிணவறை அருகே ஸ்ட்ரச்சரில் வைத்துள்ளனர். மேலும், உயிரிழந்த சிங்காரத்தின் உடலை அவரது இல்லத்திற்கு கொண்டு செல்ல இலவச ஆம்பூலன்ஸ் உதவியை அவர்களது உறவினர்கள் கோரி இருந்தனர். அதற்கு சரிவர பதில் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனையடுத்து, அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேருவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பிணவரைக்கு வந்த அவர், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலுவை அழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், ஆம்புலன்ஸ் இருந்தும் ஓட்டுநர் இல்லாததால் 1 மணி நேரத்திற்கு பின்னர் உடலை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

First published:

Tags: Local News, Puducherry